Thursday, 4 April 2013

R.P.OM'S அகர வரிசையில் மூலிகைகள் - 'ம ' கர வரிசை மாசிக்காய்

R.P.OM'S  அகர வரிசையில் மூலிகைகள் - 'ம ' கர வரிசை
மாசிக்காய்
நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய்,
தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின்
மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை
விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும்.

மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர்.
.ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு.
துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம்
அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர்.

நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து
கொட்டை காட்சியளிக்கும்

தலை மயிர் கருக்க
*********************
சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும்.
மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து
தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர்
கருமை நிறமடையும்.

தோல் நோய்களுக்கு :
**********************
மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல்,
படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம்
கிட்டும்.
**********************************************************************************
தொண்டை நோய்களுக்கு :
***************************
தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும்.
*******************************************************************************
பல்  ஈறு பலமடைய
*********************
சிலருக்கு அடிக்கடி ரத்தம் கசியும் பல காரணம் இருந்தாலும் சிலருக்கு பலகீனமான ஈறுகள் இருக்கும் ..அவர்கள் மாசிக்காயை துளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும்
பாத வெடிப்பு நீங்க
*******************
மாசிக்காயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் பித்த வெடிப்பு குறையும்.உப்பு நீரில் கால்களை கழுவி வந்தால் பாத வெடிப்புகள் மாறும்.
*******************************************************************************
பேதி நிற்க [குழந்தைகளுக்கு ]
*******************************
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும்.
***************************************************************************
முகம் அழகு பெற [கரடுமுரடான முகத்திற்கும் ]
***************************************************
ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.
 *********************************************************************************

மாதாவிடாய் சமை ரத்த போக்கு கட்டுப்பட
*********************************************
மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.
******************************************************************************
மேக நோய் நீங்க :
********************
 நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும்.
மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக்
கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும். உடலில்
தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல்
சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி
மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.
வயிற்று நோய் அகல :[ R.P.OM அனுபவ வைத்தியம் ]
*******************************************************
எங்கள் சொந்தாகாரர் ஒருவர் எங்கள் தந்தையிடம் கூறிய கதை ,அவர் பல வருடங்களாக வாயிற்று வலிக்காக பல லட்சங்களை இழந்துள்ளார் ஒரு வைத்தியர் ஆலோசனையில் அவர் 15 நாள் 3 வேலையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு மாசிக்கையை தூள்செது நீரில் விழுங்கிவிட்டு ஒரு பச்சை வாழைப்பழத்தை தோளோடு முழுங்கி விட்டாராம் ஒரு மாதத்தில் அற்புதமாக குணம் பெற்றாராம் 

வாய் நாற்றம் அகல :
***********************
சிலருக்கு உடல் ஆரோக்யமாக இருந்தாலும் வாயிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டு இருக்கும்.  இந்த துர்நாற்றம் அகல வாரம் ஒரு முறையாவது மாசிக்காய் ஒரு துண்டை வாயில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வாயில் ஊறப்போட வேண்டும்.

வாய்ப்புண் நீங்க :
*******************
மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.மாசிக்காய் வாங்கி கல்லில் தயிர் தொட்டு உரைத்து அதனை தினம் 4 வேளை வாயில் தடவி வர ரொம்ப சீக்கிரம் மாறி விடும்
****************************************************************************
விஷ முறிவுக்கு
*****************
மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.
******************************************************************************
வெள்ளைப்படுதல் [ பெண்களுக்கு]
************************************
மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும்.
**********************************************************************************
ஆக்கம் அன்புடன் R.P.ஓம் 



No comments:

Post a Comment